“முத்து முத்து மகளே ” “சின்ன வெண்ணிலா” ஆகிய பாடல்களை உருக உருகப் பாடியவர் பின்னணிப் பாடகி அனுராதா படுவால் ,இந்திப்பட உலகில் இவருக்கென தனியிடம் ! சாயிபாபாவின் பக்தை. தமிழிலும் இந்தியிலும் பல பாடல்கள் பாடிய இவருக்கு இப்போது ஏழரை சனி போலும்.
கமலா என்கிற பெண் வழக்குப் போட்டிருக்கிறார்.
“என்னுடைய பயாலிஜிகல் அம்மா ( கருவில் சுமந்தவள் ) அனுராதா படுவால் .1974 -ல் இவர் பின்னணிப் பாடகியாக கொடி கட்டிப் பறந்த காலத்தில் பிறந்ததால் என்னை பூனச்சன் -அக்னீஸ் என்பவர்களிடம் கொடுத்து விட்டார். அவர்கள்தான் என்னை வளர்த்தார்கள். தற்போது வளர்ப்புத் தந்தையாக இருந்த பூனச்சன் இறந்து விட்டார்.என்னுடைய குழந்தைப் பருவத்தின் அம்மா பாசத்தை நான் இழந்துவிட்டேன்.தாயின் அணைப்பில் வாழ்கிற வாய்ப்பினை இழந்து விட்டேன். அதனால் எனக்கு 50 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்” என்பதாக கேரள நீதி மன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருக்கிறார் ,இவரது வயது 4 6.