தானத்திலேயே சிறந்தது அன்னதானம் என்பார்கள்.இப்போதெல்லாம் அன்னதானம் என்பது பிரபலங்களின் பிறந்தநாள் பேஷன் ஆகிவிட்டது. ஆனால் தானத்தில் உயர்வானது ரத்தம் கொடுப்பதும் ,உடல் உறுப்புகள் வழங்குவதும்தான் என்பது இன்றைய அவசியம் ஆகி விட்டது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடந்திருக்கிறது.
202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தானம் செய்கிற சான்றிதழ்களை சமர்பித்தனர்.
வருடாந்திர உடல் உறுப்பு தானம் செய்பவர் தமிழ்நாட்டு கணக்கெடுப்பில் 2016இல் 185 பெயரே அதிகமானது
மேலும் இதுநாள் வரையில் தமிழ்நாட்டில் உடலுறுப்பு செய்தவர்கள் எண்ணிக்கை 1338
ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அசத்திஇருக்கிறார்கள்.