‘ஹன்டர்ஸ் மூன் ‘என்பார்கள் ..அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் உதிப்பதை.!
இது அமெரிக்காவில் நிகழ்வதாகும்.
அதைப்போல ஒரே வீட்டில் இரண்டு சூரியன்.!
சூர்யா-கார்த்தி.
இருவருமே பன்முகம் கொண்டவர்கள். எவ்வகையான கேரக்டர்களிலும் நடிக்கக் கூடியவர்கள். இருவருக்குமே ரசிகர்கள் கூட்டம் அதிகம். பிற நடிக துவேசம் இவர்களது ரசிகர்களுக்கு இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியது.
அண்ணன் சூர்யா தன்னுடைய 2 டி என்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனத்தின் வழியாக வித்தியாசமான படங்களை மட்டுமே தயாரித்து வழங்குகிறார். முகம் சுளிக்கும் ஆபாசப்படங்களை தயாரிப்பதில்லை .இவரது தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. படம் நல்ல மகசூல்.தம்பி கார்த்திதான் ஹீரோ.
கொம்பன் முத்தையா இயக்கத்தில் தம்பி கார்த்தியை வைத்து இன்னொரு படம் தர திட்டமிட்டிருக்கிறார் சூர்யா.அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத செய்தி.
தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி.அது முக்கிய வேடம். அதற்காக வளர்க்கப்பட்ட முடி இன்னும் ஒரு வருடம் வரை இருக்க வேண்டியதாக இருக்கும்.இந்தப்படம் முடிந்த பின்னர்தான் பிற படங்களை தொட முடியும்.பாக்கியராஜ் கண்ணன்,பி.எஸ்.மித்ரன் ஆகியோரின் படங்கள் பெண்டிங்கில் இருக்கிறது.ஆக புத்தாண்டில் பிஸியான செடியூல்.