டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்து வந்த மா்ம ஆசாமிகள் இரும்பு கம்பி, கம்பு போன்றவற்றால்அங்கிருந்த மாணவ,மாணவிகளை சரமாரியாக கண்மூடித்தனமாக தாக்கினர்.படுகாயமடைந்த பலர் ரத்தம் சொட்ட, சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதல் குறித்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இத் தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வந்த நிலையில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடப்பதால், நாங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியும் ஜே.என்.யூ. வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இம் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென நேரில் சென்றுஅம்மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தீபிகா படுகோனே மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது பாலிவுட்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.