சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கவுள்ள படம் ‘மாநாடு’. இபடத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ம் தேதி முதல் தொடங்குகிறது. இப்படத்தில், இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் என்கிறார்கள்.
இந்தப் படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்குநடிகர் சுதீப் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால்,நடிகர் சுதீப் தனது ட்விட்டர் பதிவில், இது ‘தவறான செய்தி’ என்று பதிவிட்டார்.இந்நிலையில்,இந்நிலையில் சிம்புவுக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பட்டத்தரப்பில் இருந்து எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.