குரங்கு கடிச்சவனுக்கு மருந்து கொடுத்த டாக்டரை ஊரு சேர்ந்து ஒதுக்கி வச்ச கதையாப் போச்சு நம்ம பாஜக நிலைமை.!
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை முகமூடி போட்டுக் கொண்டு தாக்கிய குண்டர்களைக் கண்டித்தும் ,வன்முறையில் படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் நடிகை தீபிகா படுகோனே மாணவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்.
அவ்வளவுதான் .!
பாஜகவுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. டெல்லி பாஜக தலைவர் தேசிந்தர் பால்சிங் பக்கா “புறக்கணிப்போம்” என போர்க்கொடி தூக்கிவிட்டார் .
“10-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சப்பாக் படத்துக்கான புரமோஷன் வேலைதான் இந்த அனுதாப நடிப்பு. இதனால் தீபிகா படுகோனே நடித்துள்ள அந்த படத்தை யாரும் பார்க்கக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார்.
பத்தாம் தேதி படம் பார்க்கப்போகிறவர்களுக்கு செமத்தியாய் அடி கிடைக்கப்போகிறது.!