பீப் பாடல் விவகாரத்தில் போலிசாரிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ள சிம்பு,‘பீப் பாடல் ’ விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி தற்போது மனம் திறந்திருக்கிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சிம்பு கூறியது இது தான்!
இந்தப் பாட்டு எந்த படத்திலாவது வந்திருக்கா? எந்த டிவி சேனல்லயாவது போடுறாங்களா? இல்ல எந்தஎப்.எம்மிலாவது வருதா? அப்புறம் ஏன் என்னை கேள்வி கேட்கிறீங்கன்னு புரியல..? இது என்னோட பாட்டு தான். நான் தான் ரெடி பண்ணினேன்.
நான் ஒரு படத்தை ரிலீஸ் பண்ணிருக்கும் போது ”சார் நீங்க இந்தப் படத்துல இப்படி நடிச்சிருக்கீங்க”ன்னு கேள்வி கேட்கிறீங்கன்னா நான் பதில் சொல்லணும். இல்ல ”நான் ஒரு ஆல்பம் ரிலீஸ் பண்ணிருக்கேன். அதுல நீங்க இந்த மாதிரி பாடியிருக்கீங்க”ன்னு என்கிட்ட கேட்டா அதுக்கு நான் பதில் சொல்லலாம்.
நான் வீட்ல ஒரு லப் பெயிலியர் சாங்கா இருக்கட்டும், ஒரு ஹீரோ அறிமுக சாங்கா இருக்கட்டும், இல்ல ஒரு கடவுளைப் பத்தின பாட்டா இருக்கட்டும், ஒரு ப்ரெண்ஷிப் பத்தின பாட்டா இருக்கட்டும். இந்த மாதிரி பொதுவா நெறைய பாடல்களை கம்போஸ் பண்ணுவேன். அதுமட்டுமில்லாம நான் ஒரு பாடல் கம்போஸ் பண்றப்போ டம்மியா வார்த்தைகள் போட்டு அப்போ அந்த நேரத்துல எந்த யோசிக்கிறோமோ சும்மா ஒரு வெர்ஷனை தயாரித்து வைப்போம். முடிவா அதோட அவுட் வெளியில வரும்போது அது எப்படி மக்கள்கிட்ட போய்ச்சேரணும்கிறது எனக்கும் தெரியும்.
‘எவண்டி உன்னைப் பெத்தான். கையில கெடைச்சா செத்தான்’ன்னு தான் எழுதினேனே தவிர ‘எவடி உன்னைப் பெத்தா கையில கெடைச்சா செத்தா’ன்னு எனக்கு எழுதல. அப்படி எனக்கு எழுதத் தெரியாதா? அதனால ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில வரப்போகுதுன்னு தெரிய வரும்போது அதை எப்படி அவங்ககிட்ட கொண்டு போய் சேர்க்கணும்னு எனக்குத் தெரியும். தெரியாம வளர்ந்த பையன் இல்லை.
பொதுவா எல்லா லவ் பெயிலியர் பாடலை எடுத்துக்கிட்டீங்கன்னா பொண்ணுங்களை திட்டி திட்டியே வரும். ஆனா நான் என்னோட பாடலில் ”பொண்ணுங்களை நீ திட்டாத மாமா”னு தான் எழுதினேன். ”நமக்கு செட்டாகத பொண்ணுங்கிட்ட போய் நாமளா போய் ‘லவ் லவ்’ன்னு விழுந்துட்டு அந்தப் பொண்ணை திட்டுறது தேவையில்ல. உன் வாழ்க்கையோட தோல்வி தான் உன் வாழ்க்கையோட வெற்றி, உன் காதலோட தோல்வி தான் உன் வாழ்க்கையோட வெற்றி, உனக்குன்னுஒரு பொண்ணு வருவா, அந்தப் பொண்ணை கடவுள் உனக்குக் கொடுப்பார்”ன்னு தான் எழுதியிருக்கேன்.‘பீப்’ன்னு ஒரு விஷயம் வந்தது கூட என்னன்னா பொதுவா நம்ம சென்சார்ல ‘வெண்ணை’, ‘கேனை’ங்கிற வார்த்தைகளைக் கூட மியூட் பண்ணச் சொல்வாங்க. அதுக்காக ‘பீப்’ சவுண்ட் பயன்படுத்துவாங்க. அதே மாதிரி நாமளும் பாடல்ல ‘பீப்’ சவுண்ட்டைப் போட்டு பாடல் போட்டா என்னன்னு ஒரு ‘ஜாலி’யா முயற்சி பண்ணினது தான் அந்த ‘பீப்’ சவுண்ட்.இதை நானே வெளியில விட்டுருந்து என்கிட்ட கேள்வி கேட்டா சரி. ஆனால் நான் அந்த பாட்டை ரெடி பண்ணி வீட்ல வச்சிருந்ததை எவனோ எடுத்து ரிலீஸ் பண்ணிட்டான். அதுக்கு என்னை கேள்வி கேட்கிறதுஎந்த வகையில் நியாயம் !இப்ப, நம்மளோட பழைய உடைஞ்சு போன போன்ல இருந்து கூட டேட்டாவை எடுக்கிற டெக்னாலஜி வந்துருச்சு. அதாவது உங்க வீட்ல என்னென்ன இருக்குன்னு என்னால மூணு நாள்ல கண்டுபிடிக்கிற வாய்ப்பு இருக்கு. அந்தளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கு.
அனிருத்துக்கும், இந்த பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை ஏன் தேவையில்லாம இதுல இழுக்குறாங்கன்னு தெரியல. நான் எல்லாவற்றையும் எதிர் கொள்ளக்கூடிய ஆள் தான். யாருக்கும் பயப்பட மாட்டேன். கடவுளுக்கு மட்டும் தான் பயப்படுவேன். நான் அம்மாவுக்காக பாடியிருக்கேன், என் பொண்டாட்டிக்காக பாடியிருக்கேன். இப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் போட்டு வெச்சிருக்கேன். அதுல எந்த பாடலை எந்த படத்துக்கு சேர்க்கலாம்ங்கிறதை நான் படம் எடுக்கிறப்போ தான் முடிவு பண்ணுவேன்.யாருமே கெட்ட வார்த்தை பேசுறதில்லையா? எல்லாருமே பேசுறாங்க. சொல்லப்போனா மற்ற மொழிகளை விட தமிழ்ல தான் அதிக கெட்ட வார்த்தைகள் இருக்கு. அப்படி இருக்கும் போது நான் ஏன் பாடல்களில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது?டிவியில போடுற பாடல்கள் மட்டும் தான் குழந்தைகள் கிட்ட போய்ச்சேரும், என் பாடல் இணையதளத்துல தான் இருக்கு. அதே இணையதளத்துல தான் ஆபாசப் படங்களும் இருக்கு. அப்போ அதெல்லாம் குழந்தைங்ககிட்ட போய்ச் சேராதா? என் பாட்டைக் கேட்கிறதா சொல்ற குழந்தைகள் ஆபாசப் படங்களை மட்டும் பார்க்காதா?இது என்னங்க நியாயம்?ஒரு பாட்டுல ”வெட்றா அவள… குத்துறா அவள”ங்கிறான். அதுக்கெல்லாம் யாரும் கேள்வி கேட்கல. நான் ”தம்மடிக்காத… தண்ணி அடிக்காத இந்த மாதிரி நாசமாப் போவாத பொண்ணுங்களை தேவையில்லாம திட்டாத உன்னோட தப்புக்காக எதுக்காக அப்படி பண்ற…உனக்குன்னு ஒரு பொண்ணு வருவான்”னு ஒரு நல்ல விஷயத்தைத் தான் சொல்லி பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்ணித்தாங்க நான் இந்தப் பாட்டை எழுதினேன்.
உண்மையிலேயே ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு அதிகமான ரசிகர்களே பொண்ணுங்க தான். இதை டோட்டலா ட்விஸ்ட் பண்ணி சிம்புங்கிற ஒரு தனிப்பட்ட மனிதனை வந்து டார்கெட் பண்றாங்க. அதெல்லாம் எனக்கு பிரச்சனையே கெடையாது.
என்னை அவ்ளோ தூரத்துக்கு இழிவு படுத்தியிருக்காங்க. நான் என்ன சொன்னேங்கிறதைக் கூட கேட்கல. என்னொட இமேஜைக் கெடுக்கிறதுக்கு ஒண்ணுமில்ல, இதுக்கு மேலேயே என்னைக் காயப்படுத்தியிருக்காங்க, எந்தப் பொண்ணுங்களை நான் கேவலமாகப் பேசினேன்னு சொல்றாங்களோ அதே பொண்ணுங்களோட உதவியோட தான் இப்பவும் நான் தனிச்சு நிக்கிறேன்.
சட்ட ரீதியான விஷயத்தை என் குடும்பம் பார்த்துக்கிட்டிருக்காங்க. நான் தப்பு பண்ணியிருந்தா முதல் ஆளா வந்து மன்னிப்பு கேட்பேன். எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன். இப்படி ஒரு குடும்பம் கெடைச்சதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கேன். நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா முதல்ல என் வீட்ல தான் என்னை கண்டிப்பாங்க. நான் பெண்களை எந்த விதத்திலும் தவறா சித்தரிக்கல.
தமிழ்சினிமாவுல யாருமே எனக்கு உதவிக்கு வரல. என் கூட இருந்தவங்களே எனக்கு உதவிக்கு வரல. இதுக்கு மேல நீங்க இதை எப்படி வேணும்னாலும் எடுத்துங்க…என்கிறார் சிம்பு!