இன்றுதான் லைகாவின் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இன்று வெளியாவதாக இருந்த தனுஷின் படம் 16 ஆம் தேதி வெளிவரும் என தெரிகிறது. இதனால் தனுஷின் ரசிகர்களும் தர்பார் வெளியான தியேட்டர்களில் குவிந்து விட்டார்கள்.
இன்று அதிகாலை 4 மணி ஸ்பெஷல் ஷோவுக்கு தனுஷின் குடும்பம்,அனிருத்தின் குடும்பம் என கூட்டமாக வந்திருந்து படத்தை ரசித்தார்கள்.
லதா ரஜினி,ஐஸ்வர்யா தனுஷ்,சவுந்தர்யா ,இவர்களுடன் அனிருத்தின் குடும்பத்தினரும் வந்திருந்தார்கள்.
ரஜினியின் தீவிரமான ரசிகரான லாரன்ஸ் மாஸ்டரும் வந்திருந்தார். ரசிகர்களுடன் சேர்ந்து இவர்களும் ஆரவாரம் செய்து ரசித்தார்கள்.