பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆழ்வார்க்கடியான் கேரக்டரை யார் பண்ணுகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. மிகவும் முக்கியமான வைஷ்ணவன் கேரக்டர். மொட்டைத்தலையும் தொப்பையுமாக சற்று குள்ளமாக வரைந்திருந்தார் அமரர் மணியம் .தற்பொழுது தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மணிரத்னம் கார்த்தி,ஜெயம் ரவி ஆகியோர் தொடர்புடைய காட்சிகளைமணிரத்னம் படமாக்கி வருகிறார்.
இங்குள்ள படத்தில் கார்த்தி,ஜெயம் ரவி இருவருக்கும் இடையில் இருப்பவர் யார் என தெரிகிறதா?
மொட்டைஅடித்திருப்பது தெரியாமல் இருப்பதற்காக தொப்பி அணிந்திருப்பவர் ஜெயராம்.
அவர்தான் ஆழ்வார்க்கடியானாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.
சைவத்தை எதிர்த்து வாதாடும் தீவிர வைஷ்ணவனாக எப்படி தமிழ் பேசப்போகிறார் என்பது தெரியவில்லை.ஆனால் ‘நமோ ‘ என்கிற படத்தில் வைஷ்ணவராக நடித்துக் கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வனில் நாமத்தையும் குடுமியையும் மாற்றிக் கொண்டால் போதும். ஆழ்வார்க்கடியான் ரெடி.!