கல்லை முழுங்கி விட்டு செலுசில் சாப்பிட்டால் சரியாகி விடுமா?
எருமையை விழுங்கிய மலைப்பாம்பு விழுங்கவும் முடியாமல் ,துப்பவும் முடியாமல் தவிப்பதை போல பாஜகவும் திணறுகிறது. குடியுரிமை திருத்த மசோதாவானது மக்களை காவு வாங்கும் மசோதாவாக மாறாமல் இருக்குமா?
சி.ஏ.ஏ. என்கிற சட்டப்பிரிவுக்கு இந்தியா முழுமையும் கடுமையான எதிர்ப்பு. இந்த சட்டம் எதை நோக்கி செல்லும் என்பதை அரசியல் வல்லுநர்கள் பலவிதத்திலும் ஆய்வு செய்து விட்டு “ஐயோ பரிதாப இந்தியாவே “என அலறுகிறார்கள்.
மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான உலக நாயகன் கமல்ஹாசன் இந்து என்.ராமுடன் உரையாடியதில் சில பகுதி……
“லஞ்சம் தாண்டவமாடும் முக்கியமான மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது. அதிகாரம் இருந்தால் மட்டுமே அதை மாற்ற முடியும்.அதிகாரம் வேண்டும்.
அடல்பிகாரி வாஜ்பாயின் வழியில் இருந்து மோடியும்,அமித் ஷாவும் விலகி இருக்கிறார்கள்.
இந்து ஓட்டு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு ‘இந்து ராஷ்டிராவாக ‘மாற்ற கெட்ட வழிகளில் முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு ரஜினி நல்லது செய்ய வேண்டும்.”