
இந்நிலையில், பாலிவுட்டில்,, சன்சில்க் ரியல் எஃப் எம், ஹோஸ்டேஜஸ், தேரே லியே புரோ உட்பட சில படங்களில் நடித்துள்ள நடிகை மல்ஹார் ரத்தோட், தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தி நடிகை மஹ்லார் ரத்தோட், தனது பாலியல் தொல்லை அனுபவங்களை, ஒரு பேட்டியில் கூறும்போது, சினிமாவில் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்ற கனவில் 2008 ஆம் ஆண்டில் மும்பை வந்தேன். அப்போது எனக்கு டீன் ஏஜ் வயது. வாய்ப்புக்காக ஒரு தயாரிப் பாளரைச் சந்தித்தேன்.
அவருக்கு 65 வயது இருக்கும். என்னிடம், நான் உன்னில் ஒருவனாக இருக்கிறேன் என்றார். எனக்குப் புரியவில்லை. பிறகு எனது மேலாடையை கழற்றச் சொன்னார். நான் நடுங்கிவிட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.பிறகு எனக்கு வாய்ப்பே வேண்டாம் என்று அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அந்த தயாரிப்பாளர் யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்ட நடிகை மஹ்லாரின் இந்தப் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பட