
ஆசிட் வீச்சுக்கு உள்ளான ஒரு பெண்ணின் கதைதான் சபாக் .உண்மை நிலவரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிற இந்த படத்தில் தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவர் அண்மையில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு வன்முறைக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
இதற்கு பாஜகவினர் கடுமையான எதிப்பினை தெரிவித்திருந்தனர். இந்த படத்தை யாரும் பார்க்கவேண்டாம் என்றும் கூறி இருந்தார்கள். ஆனால் முதல் நாள் வசூல் 4 கோடியைத் தாண்டிவிட்டது .
தற்போது மத்திய அரசு தனது எதிர்ப்பை வேறு வழியில் காட்டி விட்டது. ‘ஸ்கில் இந்தியா ‘விளம்பரத்திலிருந்து தீபிகாவை நீக்க முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.












