
தமிழ்நாட்டில் நடிகர் சித்தார்த். வட நாட்டில் டைரக்டர் அனுராக் காஷ்யப்.
பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கும் இரண்டு சினிமா பிரபலங்கள்.
பிரதமருக்கு அரசாங்க பலம்.இவர்களுக்கு மீடியா பலம்.
குடியுரிமை திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த டைரக்டரும் நடிகரும்!
“எழுதப்படிக்கத் தெரியுமா ,”என்று கேட்கிற அளவுக்கு காஷ்யப் கையில் தடியுடன் நிற்கிறார்.
“சலுகை வேணும்னா இங்க தானே வரணும். வருவில்ல, அப்ப பாத்துக்கிறேன் ” என கையில் அரிவாளுடன் தயாராக இருக்கிறது பா.ஜ.க.

“முதலில் உங்க அப்பாவின் பெர்த் சர்டிபிகேட்டை காட்டுங்க, அப்படியே அரசியல் அறிவியலில் வாங்கிய டிகிரி சர்டிபிகேட்டையும் காட்டிடுங்க.”என்று கேட்கிற சினிமா டைரக்டர் தன்னுடைய இரண்டு படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கும்படி மத்திய அரசிற்கு மனு அனுப்பியிருக்கிறார் .
“மாட்டுனியா மவனே” என்று உத்திரப்பிரதேசத்து முதல் மந்திரியை கையக் காட்டிவிட்டது பாஜக அரசு.
“இது யோகி ஆதித்யநாத் அரசு செய்ய வேண்டிய காரியம் .அவர்ட்ட கேட்டுக்க” என்று முரட்டு சாமியாரிடம் அனுப்பி இருக்கிறது.
வில்லாதி வில்லன்களையும் மல்லாக்க படுக்க வைத்து ரோடு ரோலரை ஏற்றுகிற அந்த சாமியாரிடம் ‘இமைக்கா நொடிகள் ‘ வில்லன் காஷ்யப்பின் வீரம் எடுபடுமா?
பார்க்கலாம்.












