ஆஸ்கர் நடிகை. இவரது பெயர் Gwyneth Paltrow. ஹாலிவுட் நடிகை. விரைவில் நெட் பிளிக்ஸ் சீரியலில் இவரை பார்க்கலாம்.
அண்மையில் மேலை நாடுகளில் இவரின் பெயர் பெரிய அளவில் அடிபட்டது.
நம் நாட்டில் மிதிபடக்கூடிய ஒரு காரியத்தை அங்கு அவர் செய்திருக்கிறார்.
வாத்ஸாயனனை விஞ்சக்கூடிய வித்தகன் எவனும் மேலை நாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. இவனளவுக்கு காமக்கலையை எழுதவும் இல்லை.
என்றாலும் அந்தரங்கம் இங்கு ஆராதிக்கப்பட்டது. அது வெட்டவெளி பந்தமாகவும் வெளிநாடுகளில் விளங்குகிறது. அவர்களது கலாசாரம் அதை அனுமதிக்கிறது.
இதனால்தானோ என்னவோ கெனத் பால்த்ரோ நடிகையின் அந்த அசிங்கமான விளம்பரத்தை ரசிக்கிறார்கள். கால மாற்றத்தில் இந்தியாவிலும் அத்தகைய விளம்பரங்கள் விலையாகலாம்.
எரிந்தால் மணம் பரப்புகின்ற மெழுகுவர்த்தியை ஒரு கம்பெனி சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறது.அதை எப்படி சொன்னால் விலையாகும்?
“ஒரு நடிகை தனது ‘அந்தரங்கத்தின் ‘வாசனை” என்பதாக சொன்னால் மார்க்கெட் பிச்சுக்கிட்டுப் போகாதா?
அடடா..அடடடா!
அதில் ஆஸ்கார் நடிகையே மாட்டி விட்டார் என்றால் அவர்களது வியாபார உத்தி எந்த அளவுக்கு ‘கீழே’ சென்று இருக்கிறது. அந்த மெழுகுவர்த்தியின் விலை 75 டாலர்.