நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.
அதில் அவர்களுக்கு தனி சுகம்.இது ஒரு வகையான மனநோய் என்கிறது மருத்துவம்.
நடிகை நந்திதாவுக்கு ஒருவர் தொடர்ந்து இன்ஸ்டராகிராமில் ஆபாசமாக செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார்.
ஒரு ரசிகரை இழந்து விடக்கூடாதே என்கிற தயக்கம் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால் அமைதியாக இருந்திருக்கிறார் நடிகை.
ஒரு கட்டிடத்துக்கு மேல கடுப்பாகி விட்டார் நந்திதா.
அந்த ஆளின் பெயரை பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார். வஞ்சி செழியன் என்பது அவரது பெயராம். அழகான தமிழ்ப்பெயராக இருக்கிறது. ஒரு வேளை இந்த பெயருக்குள் ஒளிந்து கொண்டு அனுப்பியிருப்பார்களோ என்னவோ?
“இவர்களுக்கு குடும்பம் என்பது கிடையாதா ,இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களே ?” என வருத்தப்பட்டிருக்கிறார். நடிகைகளும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கிறபோது எல்லை தாண்டாமல் இருந்தால் நல்லது. ஆனால் உடலை ரசிக்கவேண்டும் என்பதற்காக சிலர் திறந்த வெளி பல்கலைக் கழகமாக காட்சி கொடுப்பதை என்னவென சொல்வது?