நயன்தாராவின் காதல் கதை என்றால் இந்த காலத்து திரைப்பட ரசிகர்களுக்கு கற்கண்டு பொங்கல் மாதிரி. பத்திரிகையாளர்களுக்கும் கொண்டாட்டம்தான்.!அவர்கள் எழுதிய கிசு கிசுக்களை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ஆசை இருக்காதா ? அதனால்தான் “நானும் சிங்கிள்தான் “என்கிற படத்தை எடுக்கிறார்கள் போல.!
இந்த படத்தை பற்றி இயக்குநர் கோபி விவரிக்கிறார்.
“சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ” நானும் சிங்கிள் தான் ” என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.
தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போதுவரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.
இந்த படத்தின் ஹீரோ தினேஷின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபி. படத்தின் ஹீரோயின் தீப்தி திவேஸ்