நடிகர் விஷ்ணு விஷால் . போட்ட முதலுக்கு அவ்வளவாக மோசம் வராத நடிகர்களில் இவரும் ஒருவர்.
இரண்டரை ஆண்டுகளாக இவரைப் பற்றி அவ்வளவாக செய்திகள் வரவில்லை. விளையாட்டு வீராங்கனை ஜ்வாலா கட்டாவை காதலிக்கிறார் என்கிற செய்தி மட்டுமே கசிந்தது.
இரண்டரை ஆண்டுகள் …என்ன நேர்ந்தது அவருக்கு?
அவரே சொல்கிறார்,கேளுங்கள்.
“வாழ்க்கையில் உயர்வு தாழ்வு இயல்புதான்.
ஆனால் இரண்டரை ஆண்டு காலம் எனது வாழ்க்கை இருண்டு போயிருந்தது.
11 வருட மணவாழ்க்கை 2017 -ல் முறிந்தது. நானும் மனைவியும் பிரிந்தோம். எனது மகனை பிரிந்து வாழ நேர்ந்தது. சூனியத்தை உணர்ந்தேன் .மகனை பார்க்காத வாழ்க்கை.வேதனை.
இதனால் மதுவுக்கு அடிமையானேன்.இரவு முழுவதும் குடித்தேன் ,மயங்கும் வரை குடித்தேன்.
மனஅழுத்தம் ,தூக்கமின்மை ,நோய் வாய்ப்பட்டேன்.சிறிய சர்ஜரி.
எனது படங்களும் சரியாக போகவில்லை.காலம் அறிந்து வெளியிடாததால் இழப்புகள். சொந்த படக்கம்பெனி படங்களையும் கை விட்டேன்.பொருளாதார இழப்பு. இதற்கிடையில் காடன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் படுக்கையில் இரண்டரை மாதங்கள் இருந்தேன்.
உடல் 11 கிலோ எடை ஏறியது.அதை குறைப்பதற்கான கடுமையான முயற்சி.இன்று மீண்டு விட்டேன்.எனது தந்தை ஓய்வு அடைந்தது பற்றி கூட தெரியாமல் இருந்திருக்கிறேன் என்றால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தேன் என்பது புரியும்”என்கிறார் விஷ்ணு விஷால்.
இவரது காதல் வாழ்க்கையில் ஜ்வாலா கட்டா இணைந்த பிறகுதான் புத்துணர்வு வந்திருக்கிறது. ஒரு புஷ் அப் கூட எடுக்க முடியாமல் உடல் நலிவுற்று இருந்த விஷ்ணு விஷால் தீவிர பயிற்சிக்குப் பிறகு சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்.