ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்கிற பெயரில் படமாக்கிவருகிறார்கள்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வளர்கிற இந்த படத்தில் வட இந்திய நடிகை கங்கனா ரணாவத் கதையின் மையக்கருத்தான ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
எம்.ஜி.ஆராக நடிப்பவர் அரவிந்தசாமி.
இவருக்காக மேக் அப் கலைஞர் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு ஒப்பனை செய்திருக்கிறார். அவரை எம்.ஜி ஆராக காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம் . புகழுடன் வாழ்ந்து மறைந்த தலைவனை அப்படியே பிரதி எடுப்பது இயலாத காரியம்.சிலையாக செதுக்குவதும் கஷ்டமே.
ஆனால் அரவிந்தசாமியை புரட்சித் தலைவராக காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் .கிராம மக்கள் சுலபத்தில் அடையாளம் கண்டுகொள்வார்கள்.