நடன இயக்குனர்களாக அறிமுகமாகி டைரக்டர்களாகவும் களமிறங்கியவர்களின் வரிசையில் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ஶ்ரீதர், ரிச்சர்ட், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் தற்போது லேட்டஸ்ட்டாக இடம் பிடித்துள்ளவர் நடன இயக்குனர் கலாவின் சகோதரி பிருந்தா மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில், பல்வேறு பாடல்களுக்கு நடன காட்சிகளை இயக்கியுள்ள இவர் தற்போது, துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.
பக்கா ரொமான்டிக் கமரசியல் கதையான இப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.