எம்.குமரன் S/O மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின் அதைத் தொடர்ந்து , சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன், அஜீத்துடன் வரலாறு, ஆழ்வார், கமலுடன் தசாவதாரம் என முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்தார். பாலிவுட்டிலும் காலடி வைத்தார்.அங்கும் சில படங்களில் நடித்து வந்த அசின், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல்சர்மாவை காதலிப்பதாகவும் விரைவில், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பரபரப்பாக பாலிவுட்டில் செய்திகள் வெளியானது . திரையுலகினர் பலரும் கஜினி படத்தின் கதை நிஜம் ஆகி விட்டதாகவே கூறினர்.
இந்நிலையில் இருவருக்கும் வரும் ஜனவரி 23ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், திருமணத்திற்கு இருவீட்டார் சார்பில் முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அசின் சமீபத்தில் வெளிநாடு சென்று தனது திருமண உடைகள் மற்றும் மேக்அப் சாதனங்கள் ஆகியவற்றை வாங்கி வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடதக்கது.