Sunday, January 17, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home INTERVIEW

 விக்ரம் முகத்திலயே சங்கீதா துடைப்பத்துல அடிச்சாங்க!-ஸ்டண்ட் சிவா பரபரப்பு பேட்டி!!

admin by admin
January 17, 2020
in INTERVIEW
0
630
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்டன்ட்  சிவா தமிழ் சினிமா உலகில் இந்தப்பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 80க்கும் மேலான படங்களில்  சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். வேட்டையாடு விளையாடு, கோலி சோடா படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரனின் சாம்பியன் படத்தில் முழு வில்லனாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். தற்போது தன் மகனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்…

கேள்வி; இனி எப்படி சண்டைப்பயிற்சி இயக்குநரக பணியாற்றுவீர்களா இல்லை நடிப்பு மட்டும் தானா ?

You might also like

சிம்பு புது அவதாரம் எடுத்திருக்கிறார்! ‘ஸ்டன்ட்’ சிவா பொங்கல் சிறப்பு பேட்டி!!

“மிகப்பெரிய சவாலை சந்தித்தேன்” -சூர்யா மனம் திறந்த பேட்டி .

“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.!

ஸ்டன்ட்  சிவா; இல்லை இரண்டுமே செய்வேன். சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றுவேன். நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்.

கேள்வி ; உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன், எப்படி சினிமாவுக்குள் வந்தீர்கள் ?

ஸ்டன்ட்  சிவா;  நான் பிறந்து வளர்ந்தது எல்லாமெ  சென்னை தான். எனக்கு 15 வயசுலருந்தே படிச்சிட்டே வேலை செய்யனும்கிறது என்னோட ஆர்வம்
10 வது படிக்கும்போதே பைக் மெக்கானிக் கடையில வேலை பார்த்தேன். அங்க ஃபைட்டர்ஸ் எல்லாம் பைக் சரி பண்ண வருவாங்க. அவங்க பழக்கம் மூலமா ஸ்டண்ட் மேல ஆர்வம் வந்தது. எங்க மாமா எம் ஜி நடராஜன் யூனியன்ல இருந்தாரு அவர் மூலமா ஸ்டண்ட் யூனியன்ல சேர்ந்தேன். 1989 ல இருந்து சினிமாவுல வேலை செய்திட்டு இருக்கேன். அன்புக்கட்டளை படம் முதல் படம் ராம்போ ராஜ்குமார் கூட வேலை பார்த்தேன். அப்பல்லாம் உதவியாளராக ஆகவே 5 வருஷம் ஆகும். நிறைய படங்கள் வேலை பார்த்திருக்கேன் ஸ்டண்ட் மாடரா 1997 தான் முதல் படம் விஜய் சாரோட லவ் டுடே படம் பண்ணினேன். Stun சிவாங்கிற பேர் அந்தப்படத்தில தான் வந்தது.

கேள்வி ;  ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு அப்புறம் அதிக அடைமொழி வச்சிக்கிறாங்க அது ஏன் ?

ஸ்டன்ட்  சிவா;   சூப்பர் சுப்பராயன் மாதிரி ஆரம்பகட்டத்தில இருந்தே அந்த மாதிரி வந்திட்டு இருந்தது. எனக்கி அந்த மாதிரி எண்னம் எல்லாம் இருந்தது இல்ல. கே எஸ் ரவிக்குமார் சாரோட முதல்படத்தில இருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவர் தான் என்னோடபடத்தில பண்ணுற சொல்லி உனக்கு ஒரு பேர் இப்பவே வைக்கிறேன்னு சொல்லி stun சிவான்னு பேர் வச்சார்.

கேள்வி ; இதுவரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க ?

ஸ்டன்ட்  சிவா;  தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி  என 80க்கும் அதிகமா படங்கள் பண்ணியிருக்கேன். கண்ணுக்குள் நிலவு படத்துக்கு மாநில விருது வாங்கியிருக்கேன். பிதா மகன் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும்னு எல்லோரும் சொன்னாங்க ஆனா கிடைக்கல ஆனா கூடிய சீக்கிரம் வாங்கிடனும்.

கேள்வி ; நடிப்புக்குள்ள எப்படி வந்தீங்க ?

ஸ்டன்ட்  சிவா; சாதாரண ஃபைட்டரா இருக்கும்போதே நடிக்க எனக்கு நிறைய ஆர்வம் இருந்தது. ஷீட்டிங்ல திடீர்னு ஏதாவது ஸீன்ல பத்து பேர் வாங்கனு கூப்பிடுவாங்க. எல்லாரும் ரெடியாக போனா நான் உதவி இயக்குநர பார்த்து டயலாக் இருக்கானு கேட்டு அத மனப்பாடம் பண்ணி ரெடியா இருப்பேன். மத்தவங்க சொதப்பும்போது நான் பண்றேன்னு சொல்லி கேட்டு வாங்கி நடிப்பேன். அப்பல்லருந்தே நடிப்பு மேல அவ்வளவு ஆர்வம். பிதாமகன்ல நடிக்கும்போது விக்ரம் சார மிரட்டுற மாதிரி ஒரு ஸீன் அதுல ரிகர்சல் பண்ணும்போது பாலா நடிக்கிறியானு கேட்டாரு. என்ன அந்த ஸீன்ல நல்லா தெரியிற மாதிரி காட்டினார். அதுக்கப்புறம் கமல் சாரோட வேட்டையாடு விளையாடு படத்துல முதல் ஸீன் பண்ணினேன். பெரிய அறிமுகம் அது மூலமா கிடச்சுது. கோலி சோடா படத்தில விஜய் மில்டன் கூப்பிட்டு நடிக்க வச்சார். அத பார்த்து தான் சுசீந்திரன் சாம்பியன் படத்தில முழு வில்லனா அறிமுகப்படுத்தினார். இப்ப ஆனந்த விகடன்ல அதுக்கு விருது வாங்கிருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் நல்ல  இயக்குநர் படத்திலயும் எல்லா நடிகர்களோடவும் படம் பண்ணணும்.

கேள்வி ; ஸ்டண்ட் மாஸ்டரா என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க ?

ஸ்டன்ட்  சிவா; ஜெயம் ரவியோட பூமி படம் அப்புறம் மகிழ் திருமேனி இயக்கத்துல உதயநிதி நடிக்கிற படம் ஒன்னு பண்றேன். தெலுங்கில் மோகன்பாபு சாரோட மகன் படம் ஒன்னு பண்றேன். வி.வி.விநாயக் சார் படம், பெல்லங்கொண்டா சுரேஷ் மகன் சாய் படம் பண்றேன்.

கேள்வி ; நடிப்புல என்னென்ன படம் ?

ஸ்டன்ட்  சிவா; தெலுங்கில ரவிதேஜா நடிப்பில கிராக் படத்தில வில்லனா கமிட்டாகி நடிச்சிட்டு இருக்கேன்.

கேள்வி ; இப்ப இயக்குற படம் பற்றி ?

ஸ்டன்ட்  சிவா; என் பையன் கெவின் ஹீரோவா நடிக்க கராத்தேக்காரன் படத்த இப்ப இயககிட்டு இருக்கேன். முழுக்க ஆக்‌ஷன் கலந்த படமா இருக்கும்.

கேள்வி ; உங்க காதல் கதை பற்றி சொல்லுங்களேன் ?

ஸ்டன்ட்  சிவா; அது பெரிய கதை. அவங்க பேர் லேனி வியட்நாமிஸ். பைக் மெக்கானிக்கா வேலை பார்த்தப்போ சினிமால பைக் ஸீன் மட்டும் நடிக்க வைப்பாங்க. அந்த ஸீன் முடிஞ்சது அனுப்பிடுவாங்க. முறையா ஃபைட் கத்துக்கனும்னு நினைச்சேன். நண்பர் மூலமா ஸ்டன்ட் சொல்லித்தர தன் அப்படிங்கிறவர்கிட்ட சேர்ந்தேன் அவரோட பொண்ணு தான் லேனி காதலாகி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கெவின் ஸ்டீபன் இரண்டு பசங்க இப்ப மூத்த பையன் ஹீரோவா நடிக்கிறார்.

கேள்வி ; அப்ப வியட்நாமிஸ் பேசுவீங்களா ?

ஸ்டன்ட்  சிவா; இல்ல ஒரு சில வார்த்தைகள் மட்டும் தான் தெரியும். வீட்டில் லேனி நல்லா தமிழ் பேசுவாங்க. அவங்களோட தாத்தா இந்தியன் இங்க இருந்தவர் தான். இங்க பரம்பரையா இருந்தவங்க அவங்க. காரைக்குடில இருந்தவங்க.

கேள்வி ; ஸ்டண்ட் ஒவ்வொரு மொழியிலும் வேறவேற மாதிரி எடுப்பீங்களா என்ன வித்தியாசம் ?

ஸ்டன்ட்  சிவா; தமிழ், தெலுங்கு இரண்டுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கு. ஒரு ஸ்கிரிப்ட் தான் ஃபைட் எப்படினு முடிவு பண்ணும். தெலுங்கு படத்தில அடிச்சா கதவ ஓடச்சுக்கிட்டு வெளில பறந்து விழுவாங்க தமிழ்ல அப்படி கிடையாது. திரைக்கதைதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.

கேள்வி ; ஸ்டண்ட் ஏன் தத்ரூபமா இருக்கிறதே இல்ல ?

ஸ்டன்ட்  சிவா; அப்படி கிடையாது நான் பண்ணின எந்தப்படம் வேணாலும் எடுத்துக்கங்க ஒரிஜினலா இருக்கும் தெலுங்கு படமாவே இருந்தாலும் தத்ரூபமா இருக்குற மாதிரி தான் பண்ணுவேன். பிதா மகன் பார்த்தா தெரியும் அந்தப்படத்தில ஹீரோ வெட்டியான் அவன் அடிச்சா எப்படி இருக்குமோ அது மாதிரி பண்ணிருப்பேன் ஆனா எல்லாப்படத்திலயும் அதப்பண்ண முடியாது. கதை என்ன கேட்குதோ அதுக்குள்ள எப்படி பண்ணனுமோ அதத்தான் பண்ண முடியும்.

கேள்வி ; பிதாமகன் படத்தில விக்ரம் சங்கீதா கிட்ட துடப்பத்துல அடி வாங்குவாரே அது நீங்க எடுத்தது தானா?

ஸ்டன்ட்  சிவா; ஆமா அத நான் தான் எடுத்தேன்  ஒரிஜினல் துடைப்பத்துல  விக்ரம் முகத்திலயே சங்கீதா அடிச்சாங்க . அத எடுக்கும் போது எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. ஸீனவிட ஒரு நடிகனுக்கு முகத்தில தொடர்ந்து அடி விழும்போது என்ன ஆகும். ஆனா விக்ரம் சலிக்கவே இல்ல. பாலாவுக்கு எல்லாம் ஒரிஜனலா இருக்கணும். சண்டை எல்லாமே நேச்சுரலா  இருக்கணும் யாரும் கொஞ்ச காலத்துக்கு அந்த மாதிரி முயற்சி கூட பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணி பண்ணின படம் தான் பிதாமகன்.

கேள்வி ; எந்த ஹீரோ நல்லா ஃபைட் பண்ணுவாரு ?

ஸ்டன்ட்  சிவா; ஃபைட் பண்ணத்தெரியாத ஒரு ஹீரோவ கூட ஃபைட் பண்ண வைக்கிறது தான் ஸ்டண்ட் மாஸ்டர் வேலை. என்ன பொறுத்தவரை எல்லா ஹீரோவும் நல்லாவே ஃபைட் பண்ணுவாங்க. நாம அவங்களுக்கு தேவையான பாதுகாப்பு செய்து கொடுத்தோம்னா போதும். எல்லா ஹீரோவுக்கும் ஃபைட்னா பிடிக்கும் ஃபைட் பண்ண ஆர்வமா இருப்பாங்க.

கேள்வி ; இப்ப தமிழ்ப் படங்கள்ல ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராபர் பண்றாங்க இத பற்றி என்ன நினைக்கிறீங்க  ?

ஸ்டன்ட்  சிவா; நான் கூட நிறைய வெளிநாடுகள்ல போய் படம் பண்ணிருக்கேன். தமிழ் பில்லா தெலுங்குல பிரபாஸ் வச்சு எடுத்தப்ப நான் தான் வெளிநாட்ல நடக்கிற ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் பண்ணேன். தமிழ்ல ‘வாங்’னு ஒரு வெளிநாட்டுக்கார் பண்ணி இருந்தார். அவர விட நான் நல்லாவே பண்ணிருந்தேன். அவங்கள பொறுத்தவரை  அவங்க கிட்ட நிறைய உபகரணங்கள் இருக்கும்.அதனால  அவங்க நல்லாவே ஃபைட் கோரியோகிராப் பண்ணுவாங்க. ஆனா அவங்க ஹீரொவோட மாஸ் கதை புரிஞ்சு பண்ண மாட்டாங்க.

கேள்வி ; தெரியாத ஹீரோவுக்கு ஃபைட் சொல்லிக் கொடுத்து அவர்கிட்ட அடி வாங்கிற மாதிரி பண்ணும்போது நாம ஹீரோவாகலாம்னு தோணிருக்கா ?

ஸ்டன்ட்  சிவா; அப்படி நினைச்சதில்ல. ஆரம்பகாலங்கள்ல எல்லாருக்கும் தோணலாம். ஆனா ஒரு ஃபைட் மாஸ்டர் வேலையே ஹீரோவ டிரெய்ன் பண்றதுதான். ஒரு இயக்குநர் கஷ்டப்பட்டு ஒரு படத்தை உருவாக்கும்போது அவர் கூட்டி வர்ற ஹீரோ நம்ம எப்படி டிரெய்ன் பண்ணி மாஸா காட்டுறோம்கிறது தான் நம்ம வேலை.

கேள்வி ; ஃபைட் பண்ணும்போது அடுபட்டா அதற்கான சரியான நிவாரணங்கள் இன்ஷ்யூரன்ஸ் எல்லாம் இருக்கா ?

ஸ்டன்ட்  சிவா; ‘ஃபைட்’டை  பொறுத்தவரை இன்சூரன்ஸ் கிடையாது. ஆனா எங்க யூனியன்ல அத பண்றோம். அப்புறம் அந்த பட தயாரிப்பாளர் இயக்குநர், ஹீரோக்கள் எல்லோருமே பார்த்துப்பாங்க. விஜய் சார் கூட ஒரு படத்தில ஒரு ஃபைட்டருக்கு 1 1/2 லட்சம் கொடுத்தாரு. எங்க யூனியன்ல மூலமா அடிபடறவருக்கு தேவையான  எல்லாமே பார்த்துக்கிறோம்.

கேள்வி ; அடுத்து என்ன திட்டங்கள் ?

ஸ்டன்ட்  சிவா; என் பசங்க ரெண்டு பேரும் கெவின், ஸ்டீபன் ரெண்டு பேரும் ஸ்டண்ட் யூனியன் உறுப்பினரா இருக்காங்க. அவங்க படம் பண்ணனும். இப்ப இவங்க என்னோட படங்கள்ல உதவியா இருக்காங்க. இவங்க இருக்கும்போது நிறைய யூத்தோட ஐடியா கிடைக்குது. பூமி படத்தில மூணு பேரும் சேர்ந்து பண்ணிருக்கோம். ஸ்டீபன்  யூத் ஒலிம்பிக் தேர்வில இந்தியா சார்பா அவர் மட்டும் தான் கராத்தேவுக்காக தேர்வாகியிருந்தார். நிறைய திறமை இருக்கு. இவங்களோட இணைஞ்சு இன்னும் ஆக்‌ஷன்ல நிறைய புதுமையா பண்ணனும்.

Previous Post

துல்கர்சல்மான்- காஜல் அகர்வால் ஜோடியை இயக்கும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா!

Next Post

சீமானுக்கு குறி வைக்கிறார் ராகவாலாரன்ஸ்!

admin

admin

Related Posts

சிம்பு புது அவதாரம் எடுத்திருக்கிறார்! ‘ஸ்டன்ட்’ சிவா பொங்கல் சிறப்பு பேட்டி!!
INTERVIEW

சிம்பு புது அவதாரம் எடுத்திருக்கிறார்! ‘ஸ்டன்ட்’ சிவா பொங்கல் சிறப்பு பேட்டி!!

by admin
January 11, 2021
“மிகப்பெரிய சவாலை சந்தித்தேன்” -சூர்யா மனம் திறந்த பேட்டி .
INTERVIEW

“மிகப்பெரிய சவாலை சந்தித்தேன்” -சூர்யா மனம் திறந்த பேட்டி .

by admin
October 31, 2020
“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.!
INTERVIEW

“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.!

by admin
January 15, 2020
“எனக்கு பாரதிராஜா வில்லன்!”-தரமணி  வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.
INTERVIEW

“எனக்கு பாரதிராஜா வில்லன்!”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.

by admin
October 28, 2019
ஹீரோயின் படங்களுக்கு ரகுமான் இசை அமைப்பதில்லையா?–ஜோதிகா.
INTERVIEW

ஹீரோயின் படங்களுக்கு ரகுமான் இசை அமைப்பதில்லையா?–ஜோதிகா.

by admin
August 5, 2019
Next Post
சீமானுக்கு குறி வைக்கிறார் ராகவாலாரன்ஸ்!

சீமானுக்கு குறி வைக்கிறார் ராகவாலாரன்ஸ்!

Recent News

பிக்பாஸ்-4 போட்டியில் வென்றது இவரா?

பிக்பாஸ்-4 போட்டியில் வென்றது இவரா?

January 17, 2021
எம்ஜிஆர் பிறந்த நாளில் தலைவி ‘டீம்’ வெளியிட்ட புகைப்படம்!

எம்ஜிஆர் பிறந்த நாளில் தலைவி ‘டீம்’ வெளியிட்ட புகைப்படம்!

January 17, 2021
வனிதா வீட்டில் நடந்த விஷேசம் !

வனிதா வீட்டில் நடந்த விஷேசம் !

January 17, 2021
முதல்வர் வெளியிட்ட ‘நாற்காலி’ பட பாடல்!

முதல்வர் வெளியிட்ட ‘நாற்காலி’ பட பாடல்!

January 17, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani