சூப்பர் ஸ்டாரின் ரஜினி மக்கள் மன்றத்தின் கொள்கை பரப்பு செயலாளர் மாதிரி, நடிகர் ,டைரக்டர்,தயாரிப்பாளர் ராகவா லாரன்ஸ்.
இவருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் பத்துப் பொருத்தமும் நெகட்டிவ்.!
ரஜினியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் நக்கலடித்து ,தாக்குவது சீமானுக்குப் பிடிக்கும்.
அந்த நக்கல் நையாண்டிக்கு பதிலளித்து கேடயமாக இருப்பது ராகவாலாரன்ஸ்க்கு பிடிக்கும். தன்னை ரஜினியின் விசுவாசியாக அறிவித்துக் கொண்டிருப்பவர். இவருக்கு டான்ஸ் மாஸ்டர் சங்கத்தில் உறுப்பினர் கார்டு வாங்கி கொடுத்தவர் சூப்பர் ஸ்டார்.
யார் என பெயர் சொல்லாமலேயே லாரன்ஸ் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
“சிலர் தலைவர் படம் நல்லா ஓடலேன்னு நினைக்கிறாங்க. குறிப்பா ஒருவர் பல வேலைகளை பண்ணிக்க கொண்டிருக்கிறார்.வாட்ஸ் ஆப்பில் தலைவர் படத்தை பார்க்காதே என்று சொல்கிறார்.ஆனால் தலைவர் படம் பாக்ஸ் ஆபிசில் பிய்த்துக் கொண்டு போகுது. இலையை கையால் மறைக்கலாம். மலையை மறைக்க முடியாது.அண்ணாமலைடா!அந்த ஆண்டவனே நம்ம பக்கம்”என சொல்லியிருக்கிறார்.
பதிவில் குறிப்பிட்டிருக்கிற அந்த ‘ஒருவர்’ சீமான்தான் என லாரன்ஸ் வட்டாரம் சொல்கிறது.