இன்றைய அரசியல் :
நாடு எங்கே போகிறதுஎன்றே தெரியவில்லை.!
வந்தே மாதரம் பாடலை பாடாதவர்கள் இந்தியாவில் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் என்பதாக மத்திய மந்திரி பிரதாப் சந்திரா என்பவர் பேசி இருக்கிறார்.
வந்தே மாதரம் பாடல் ஆர்.எஸ்.எஸ். குழுவில் பாடப்பட்டு வருகிறது. இன்று இப்படி சொல்கிறவர்கள் நாளை “நமஸ்தே சதா வத்சலே “என்கிற ஆர்.எஸ்.எஸ்.சின் இறை வணக்கப்பாடலையும் பாட சொல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்து வருகிற போராட்டங்களை கண்டிக்கும் வகையில் பேசிய மத்திய மந்திரி “தீயிட்டு கொளுத்துகிறவர்கள் தேச பக்தர்கள் இல்லை.இந்தியாவின் சுதந்திரம்,ஒற்றுமை ,வந்தேமாதரம் ஆகியவைகளை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழ்கிற உரிமை இல்லாதவர்கள் .70 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சட்டம் வந்திருக்க வேண்டும். முன்னோர்களும் காங்கிரசும் பாவம் செய்து விட்டன.”என்று பேசினார்.