சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் சூப்பர் ஸ்டார் பேசிய பேச்சு பெரியாரின் ஆதரவாளர்களை கடுமையாக பாதித்து விட்டது.
துக்ளக் என்கிற வம்பு மடம் சோ வினால் கட்டப்பட்டது. அந்த வம்பு மடத்துக்கு யார் போனாலும் சிக்கலை மாலையாகப் போட்டுக் கொள்வார்கள். கழுதைகளை அட்டையில் போட்டு கவுரவப்படுத்தியவர் சோ. அந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தந்தை பெரியாரைப் பற்றிய சில கருத்துக்களை சொன்னார்.
1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட கடவுளர்களைப் பற்றிய ஆபாச சித்திரங்கள் எடுத்து செல்லப்பட்டதை நினைவு படுத்தினார்.செருப்பு மாலை போடப்பட்டதை நினைவு படுத்தினார்
அதற்கு சில திகவினர் “தமிழ் மன்னன் ராவணன் படத்தை செருப்பாலடித்த இந்து மத வெறியர்களுக்கு “பதில் அளிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சி நடந்திருக்கலாம்”என்கிறார்கள்
ஆனால் தந்தை பெரியார் கழக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு முன் போராட்டம் நடத்துவோம் என்பதாக அறிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை “நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். 1971 சேலம் மாநாட்டில் நடந்த உண்மைகளை பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன. செய்திகள் வந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் நான் பேசினேன். அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ராமகிருஷ்ணன் என்ன செய்யப்போகிறாரோ!