வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிக்கலாம் என்கிற தகவல் அழுத்தமாகத்தான் கோலிவுட்டில் பரவி இருந்தது.
ஆனால் அந்த வாய்ப்பு வேறு யாருக்கோ போகப்போகிறது என்பது பிரசன்னாவை வெகுவாக பாதித்திருக்கிறது. தனது டிவிட்டர் பகுதியில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
“வலிமை படத்தில் நானும் இடம் பெற வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்த்தார்கள். நானும் அதை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்திருந்தேன்.
அது என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என நம்பி இருந்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. எதிர்வரும் காலத்தில் தலயுடன் இணைந்து நடிக்கும் அந்த பொன்னான வாய்ப்பு கிட்டும் என்று நம்புகிறேன் “என பதிவிட்டிருக்கிறார்