கானகந்தர்வன் என அழைக்கப்படுகிறவர் பாடகர் ஜேசுதாஸ். இவர் இந்து கோவில்களுக்கு சென்று வணங்கும் பழக்கம் உள்ளவர். இவரது ‘அறிவராசனம் ‘பாடல்தான் சபரிமலையில் அதிகாலை ஒளிபரப்பாகிறது. அதில் சில திருத்தங்களை சொன்னார்கள் அதையும் செய்து கொடுத்தவர் ஜேசுதாஸ்.
அவரது ஆசை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது.
“கடைசி ஆளாக என்னை அனுப்புங்கள் .கிருஷ்ணனை தரிசனம் செய்து விடுகிறேன்”என கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வருகிற சூழ்நிலையில் இடது சாரி கம்யூனிஸ்ட் தலைவர் குன்னிராமன் எம்.எல்.ஏ. ஜேசுதாஸ்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
“அவரை ஆலயத்துக்குள் அனுமதியுங்கள்” என்று.
ஆலய நிர்வாகம் என்ன சொல்லுமோ தெரியவில்லை. தொன்மையான பழக்கங்களை கடுமையுடன் பின்பற்றி வருகிற ஆலயம்தான் குருவாயூர்.