ஆடை படத்தில் துணிகரமான வேடத்தில் ஒட்டுத் துணி இல்லாமல் நடித்தவர் அமலா பால்.
இப்படித்தான் சொன்னார்கள். நவீன கம்பியூட்டர் காலத்தில் எத்தனையோ வழிகளில் நிர்வாணத்தைக் காட்டமுடியும். ஜட்டி கூட இல்லாமல் நடித்தார் என்பதை பின்வரும் காலங்களில் அமலா பாலே மறுத்தாலும் வியப்புக்கிடமில்லை.ஆனால் மேலாடையில்லாமல் நடித்தது துணிச்சல்தான்.!
இவருக்கு வெப் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பிரச்னைகளுக்கு பெயர் பெற்றவர் பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் . சொந்த மகளை கல்யாணம் செய்ய விரும்புவதாக ஸ்டேட்மென்ட் விட்டவர். மகளுக்கு உதடுகளில் முத்தம் கொடுத்து புரட்சி செய்தவர்.இப்படி பாலிவுட்டை ஒரு காலத்தில் பதட்டமடைய செய்த தயாரிப்பாளர்.
இவர்தான் வெப் சீரியல் தயாரிப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
“மனப் போராட்டத்தில் இருந்த ஒரு தயாரிப்பாளருக்கும் பிரபல நடிகைக்கும் இருந்த உறவுகளை சொல்லப்போகிற தொடர். இதயத்தை விட சிறந்த லொக்கேஷன் எது?” என்று கேட்டு பதிவு செய்திருக்கிறார்.
அவருக்கும் பிரபல நடிகை பர்வீன் பாபிக்கும் இடையில் இருந்த தொடர்பு இந்திய திரை உலகம் அறிந்த ரகசியம். இந்த கதையைத்தான் மகேஷ்பட் சீரியலாக எடுக்கப்போகிறார்.
இதில் பர்வீன் பாபியாக நடிக்கப்போவது அமலாபால் என்கிறார்கள். இவரால்தான் பர்வீனின் பழக்க வழக்கங்களை திரையில் காட்டமுடியும் என நம்புகிறார்கள்.
துணிச்சலான தயாரிப்பாளர்.துணிச்சலான நடிகை. தணிக்கையும் கிடையாது.சிறப்புடன் எடுத்து விடுவார்கள் என்று நம்புவோம்.