சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி விவகாரம்; ஜனவரி 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, இன்று திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 24-01-2020, (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், “அனைத்துக் கட்சிக் கூட்டம்” நடைபெறும் . இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது