எழுத்து இயக்கம் : யுவராஜ் சுப்பிரமணி , இசை : விஷால் சந்திரசேகர் ,ஒளிப்பதிவு :சிவா
வைபவ் ,நந்திதா ஸ்வேதா ,யோகிபாபு ,ஹரிஷ் பெராடி ,பாண்டியராஜன் ,
**************
முன்னொரு காலத்தில் போலீஸ்காரர்களை டாணாக்காரர் என்று சொல்லுவார்கள். அந்த காலத்தில் திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஒருவருக்கு சிலை வைத்து அந்த ஊரே கொண்டாடுகிறது.அந்த டாணாக்காரரின் குடும்பத்திலிருந்து வம்சா வழியாக ஒருவர் போலீசில் சேர்ந்து விடுவார். அந்த குடும்பத்தை சேர்ந்த பாண்டியராஜனின் பிள்ளை வைபவ்க்கு எல்லாமே பிட்டாக இருந்தும் சேர இயலாமல் போகிறது.
அதிலிருந்து எப்படி மீண்டு அவர் போலீசாகிறார் என்பதுதான் முழுக்கத்தை. மன்னிக்க, கதை.!
திடீரென உணர்ச்சி வயப்பட்டு விட்டால் வைபவக்கு பெண் குரல் வந்து விடும் .எஸ்.ஐ .பிட்னஸ் தேர்வில் தன்னுடைய ரிக்கார்ட்ஸை முறியடித்து விட்டானே என்கிற காண்டு டி .ஐ.ஜி.ஹரிஸ் பெராடிக்கு! அதனால் வைபவ்வை எப்படி அன்பிட் ஆக்கலாம் என யோசிக்கும் அவருக்கு வைபவ்வின் பெண் குரல் சரியான கல்லாக தெரிகிறது.அதை வைத்து காலி பண்ணிவிடலாம் என யோசிக்கிற வேளையில்தான் யோகிபாபுவின் உதவியுடன் வைபவ் மிகப்பெரிய மோசடியை கண்டு பிடிக்கிறார்.
நெருடல்கள் நிறைய. எங்கேயோ தேங்கி விட்டதை போல உணர்வு.வைபவ் -நந்திதா காதல் காட்சிகளில் ஜீவன் இல்லை.அப்பா-மகன் பாசத்தை வலியுறுத்துகிற காட்சிகளும் சவலைத்தனமாக இருக்கிறது.
இசை விஷால் சந்திரசேகர்.சாரி பாஸ்.
யோகிபாபுவின் கேரக்டரை திணித்திருக்கிறார்கள்,.அவரது ஒன் லைனர்களும் யூஸ் இல்லை.
ரொம்பவும் சிரமமுங்க.!
சினிமா முரசத்தின் மார்க் : 2 /5