தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெற் றது.
இதை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர் . இது குறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,தேர்தலை நடத்த உத்தரவிட்டது. ஆனால்,அதன் முடிவுகளை வெளியிட தடை விதித்தது. இதனையடுத்து, ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. எனினும், வாக்குகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில்,தங்களுக்கு தபால் வாக்கு மறுக்கப்பட்டதாகக் கூறி நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதே சமயம்,, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அரசு சார்பில், தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக நாசரும், கார்த்தியும் வழக்கு தொடர்ந்தனர்.
நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்அதிரடியாக உத்தரவிட்டது.மேலும், நடிகர் சங்க உறுப்பினர்களின் புதிய பட்டியலை தயாரித்து 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவும், தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாசை நியமித்தும் நீதிபதி கல்யாண சுந்தரம் உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பல்வேறு முறைகேடுகள், குழப்பங்களுடன் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது இது,தர்மம், நியாயம், நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும், நடிகர் சங்கக் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க, நாடக, நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் , ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனிடம் ஆலோசித்து தேர்தலை அணுகுவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தமது சொந்தப் பணத்தில் இருந்து நாடக, நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து செய்வோம் என்றும், இதற்கும் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். இச் சந்திப்பில், நடிகைகள் காயத்ரி ரகுராம், சங்கீதா, நடிகர் நிதின் சத்யா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்..