சினிமா இணையதளம் ஒன்றில் முதலீடு செய்கிறார் நடிகர் சூர்யா. இந்த இணையதளம் சென்னையிலிருந்தபடி, உலகெங்கும் தமிழ்த் திரைப்படங்களை உரிமம் பெற்று வெளியிட்டு வருகிறது. ஹீரோடாக்கீஸ் என்ற இந்நிறுவனம் நடிகர் சூரியாவின் 2டி என்டர்டெயின்மெண்ட், மற்றும் இதர முதலீட்டாளர்கள் சஞ்சய்அர்ஜுன்தாஸ் வாத்வா (முன்னணி திரைப்பட விநியோகஸ்தர்) வெளிநாட்டு வாழ் இந்தியர்களான பாலாஜி பஞ்சபகேசன் (யுகே), ஷங்கர் வெங்கடேசன் (போலந்து), மற்றும் வசீகரன் வெங்கடேசன் (அமெரிக்கா) ஆகியோரிடமிருந்து தங்களின் முதல் சுற்று முதலீட்டைப் பெற்றுள்ளது. 2014ல் தொடங்கப்பட்ட 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 36 வயதினிலே, பசங்க2 போன்ற தரமான படங்களை தயாரித்துள்ளது. மேலும்அடுத்து சூரியா நடித்து கொண்டிருக்கும் பிரமாண்ட படமான ’24’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. “ஒரு முன்னோக்குப் பார்வையோடு இயங்கும் நிறுவனமாக, நாங்கள் வெவ்வேறு முயற்சிகளுடன் இந்த பொழுதுபோக்கு துறையில் எங்களது வளர்ச்சியை மேம்படுத்த விளைகிறோம், அதன்வழியாகவே இந்தமுயற்சியில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம்,”என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் பாண்டியன் கூறியுள்ளார். இந்த முதலீட்டில் பெரும் பங்கினை திரைப்படங்கள் மற்றும் வாடிக்கையாளர் கையகப்படுத்தலில் பயன்படுத்த முடிவு எடுத்துள்ளனர். திரைப் படங்கள் விநியோகம் செய்ய ஒரு தரமான மாற்று வழியினை கொண்டு வந்து திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த முயற்சி உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது