திமுக அளித்த பதவியை வைத்துதான் சன் தொலைக்காட்சி இந்தளவுக்கு முன்னேற முடிந்தது என்பது பெரும்பான்மையானோரின் கருத்து. திமுக ஆளும்கட்சியாக இருந்ததால் பல சலுகைகளை அடைய முடிந்தது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து. சன் குழுமம் இன்று இந்திய தொலைக்காட்சிகளில் சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறது.
இந்த குழுமம் சார்பில் திரைப்படங்களும் தயாரிக்கப்படுகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கப்போவதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்..
இந்த நிலையில்தான் பெரியார் பற்றிய சர்ச்சைக்கு கருத்தினை ரஜினிகாந்த் பேசினார். இதை திமுகவில் இருக்கிற பலர் ரசிக்கவில்லை.
“பாஜகவின் ஆதரவாளர் ரஜினி . அவரது நோக்கம் ஆன்மீக அரசியல் வழியாக பாஜகவை தமிழகத்தில் நிலை நிறுத்துவதுதான். ஆகவே அவரை ஆதரிக்கக்கூடாது. எனவே சன் குழுமம் தனது ரஜினி பட ஐடியாவை கை விட வேண்டும்” என்று திமுகவில் இருக்கிற பலர் வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது.
“தொழில் வேற.கட்சி வேற “என்பதாக மாறன் சகோதரர்கள் சொல்லிவிட்டதாக தெரிகிறது.
திமுகவில் இருக்கிற பெருந்தலைகளில் சிலர் இதனால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கட்சித் தலைமை நெருக்கடி கொடுக்கிற நிலையில் இல்லை. தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் வலுவான பிரசார ஆயுதத்தை இழக்க தலைமை தயாராக இல்லை என்கிறார்கள்.
மத்திய உளவுத்துறையின் கை வேலை இதில் கணிசமாக இருப்பதாக சொல்கிறார்கள். ரஜினியை வைத்து தான் திமுகவை பலவீனப்படுத்த முடியும் என்பது அமீத் ஷாவின் நம்பிக்கை என்கிறார்கள்.
பார்க்கலாம்.