பெரியார் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஜினிக்கு ஆதரவு ,எதிர்ப்பு இரண்டும் எல்லா முனைகளிலும் இருந்து வருகிறது.
பாஜகவுக்கு ஆதரவு நிலையில் இருக்கிறவர்கள்தான் ரஜினியை எதிர்க்கிறார்கள்.
தற்போது தேமுதிக தலைவி பிரேமலதா ரஜினிகாந்த் தனது கண்டனத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.கூட்டணியில் இருந்தாலும் துணிந்து பெரியாருக்கு ஆதரவு தந்திருக்கிறார். ரஜினி பேசியிருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்.
“தந்தை பெரியாரைப் பற்றி உலகத்துக்கே தெரியும்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியை பேசி சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்கிற அவசியமே இல்லை. பெரியார் பற்றிய கருத்தை ரஜினி தவிர்த்திருக்க வேண்டும் பெரியார் பெண்களுக்காக புரட்சிகரமான கருத்துக்களை கூறி சரித்திரம் படைத்தவர்.
அவரைப்பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை.துக்ளக் விழாவுக்குப் போனவர் அந்த பத்திரிகையைப் பற்றி மட்டும் பேசியிருக்க வேண்டும்.
அவரை யாரோ இயக்குகிறார்கள் .அவர் வெறும் அம்புதான்.
இனியாவது இந்த மாதிரியான பேச்சுக்களை ரஜினி தவிர்க்கவேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.