சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – மேஷம்.
இந்த 2020 -ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும் . நீங்கள் தொடங்கும் காரியத்தில் கவனம் தேவை.சனி பகவான் உங்களுக்கு சில கஷ்டங்களை கொடுத்தாலும், அதைவிட அதிகமான நன்மையை கொடுக்கப் போகிறார்.உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை.
உங்களிடம் உள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மன தைரியமானது அதிகரிக்கும். உங்களது வார்த்தையில் அதிக கவனம் தேவை. உங்களுக்கு தீங்கு செய்பவர்களிடமிருந்து விலகி இருத்தல் நலம்.. வாகனங்களை ஓட்டும் போது கவனம் தேவை.
வேலை தேடுபவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல வேலையை தேடிக் கொடுக்கும். அக்கறையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கொஞ்சம் அலட்சியப்போக்கு இருந்தாலும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் உங்கள் உடன் பணிபுரிபவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். உங்களின் மேலதிகாரிகொடுக்கும் வேலையை நீங்கள் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்கள் வேலையை நீங்களே முடிப்பது நல்லது.
பெரியவர்களின் ஆலோசனையுடன் திருமண முடிவை எடுக்க வேண்டும்.நீங்களாக அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை ஒன்பதிலிருந்து சனி அதிக நஷ்டத்தை கொடுத்திருப்பார். தற்சமயம் உங்களின் தொழிலுக்கும், வியாபாரத்திற்கும் எந்த பாதிப்பும் வராது. அதே சமயம் குறைவான லாபமே கிடைக்கும். ஆனால்,உங்களின் விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை பெற்றுத்தரும். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் உஷாராக இருங்கள். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பசு மாட்டிற்க்கு அகத்திகீரை கொடுத்து. குலதெய்வ வழிபாடு செய்து வாருங்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த வரை உதவுங்கள் .
நாளை ரிஷப ராசி நேயர்களுக்கு.