சிம்புவின் ஆபாச பாடல் விவகாரமே இன்னும் ஓயவில்லை, இந்நிலையில்,ஜேஜே, அட்டகாசம், ஓரம்போ, நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா. இவருடைய சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர் ஆபாசமாக வர்ணித்திருந்தார். இதனால் கோபமான அவர் ‘என்னை ஆபாசமாக வர்ணித்த உன்னை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். நீயும் ஒரு பெண்ணிடம் இருந்து தான் வந்திருக்கிறாய், உன் சகோதரி, தாயும் ஒரு பெண் என்பதை மறந்து விடாதே, நீ திருந்தி வாழ இன்னும் அவகாசம் உள்ளது’ என பதிலடி கொடுத்துள்ளார்./