உருவ கேலி என்பது இழிவான ஒன்று.
இது பெரும்பாலும் சினிமாவிலும் வளர்க்கப்பட்டிருக்கிறது. காமடி என்பதாக உருவ கேலி சித்தரிக்கப்பட்டது. புளிமூட்டை என்கிற அடை மொழியுடன் ராமசாமி என்கிற சிரிப்பு நடிகர் அந்த காலத்தில் அழைக்கப்பட்டார். பிரண்ட் ராமசாமி என்பவர ஒல்லியாக இருந்ததால் அதற்காகவே நடிக்கும் வாய்ப்பு.
உசிலை மணி, பிந்து கோஷ் ,குள்ள மணி ,தவக்களை போன்றவர்களும் உருவம் காரணமாக வாய்ப்புகளை பெற்றனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பின்னர் அது குறைந்து விட்டாலும் சிலரின் வக்கிரபுத்தி மறையவில்லை.அண்மையில் குஷ்பூவின் கோபத்துக்கு அத்தகைய வக்கிர புத்திக்காரர்கள் சிலர் உள்ளானார்கள்.
குஷ்பூவின் சின்ன மகள் அனந்திதா முன்னைவிட மிகவும் இளைத்து இருக்கிறார்.இதை தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டிருக்கிறார். இது அவரது பிறந்த நாள் வாழ்த்துப் படம்.