சிம்பு நடிப்பில்,சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் மாநாடு படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.பல தடைகளை தாண்டி இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிம்பு. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு இளம் பெண் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இருவரும் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு ரொமான்டிக் ‘லுக்’குடன் தோன்றும் அந்த செல்பி புகைப்படங்களை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் யார் இந்த பெண் என கேட்டு வருகின்றனர். மேலும் வீட்டில் பெண் பார்த்து விட்டார்களா? இவரைதான் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என்றும் கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் நெட்டிசன்கள் சிலர், என்னய்யா நடக்குது , நீ அடங்கவே மாட்டியா தலைவா என்றும் கேட்டு கலாய்த்து வருகின்றனர்.இன்னும் சிலரோ, வயிற்றெரிச்சலாக இருக்கு என்றும் பதிவிட்டுள்ளனர்.நடிகர் சிம்புவுக்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்த்து வரும் நிலையில், இப்புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.