ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதங்களை நிகழ்த்தப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராகு பகவான் மிதுனம் ராசியிலிருந்து கால புருஷனுக்கு இரண்டாவது ராசியான நில ராசி மற்றும் சுக்கிரனின் ராசியில் பெயரும் காலம் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் பெருகும். நெஞ்சு வலி, இதய கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது
மீடியா துறை, அழகியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்லது அதிகம் நடைபெறும். புதிய வேலைகள் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். அதிர்ஷ்டம் வேலை செய்யும். குரு எட்டாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தருகிறார். இரண்டாம் வீட்டில் உள்ள ராகு மீது குரு பார்வை விழுவதால் பணவரவு அதிகமாக இருக்கும். சனி பார்வை ஆறாம் வீட்டின் மீது விழும் காலத்தில் நோய்கள் தீரும் கடன்கள் அடையும். இந்த ஆண்டு ரிஷபத்திற்கு அற்புதமாக இருக்கும் வரவேற்க தயாராகுங்கள்.கல்யாண கனவுகள் நிறைவேறும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டு வருமானம் கிடைக்கும். காதல் திருமணம் செய்பவர்களுக்கு அற்புதமான கால கட்டம். திருமணம் செய்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எத்தனையோ சங்கடங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இது நோய்கள் நிவர்த்தியாகும் காலம். குரு நோய்களை தீர்ப்பார். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவருக்கும் நல்ல வேலை அமையும். கணவன் மனைவி இடையே இருந்த கோப தாபங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் சண்டைகளை பெரிது படுத்தாமல் விட்டு கொடுத்து போங்க. வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. அதிகமாக முதலீடு பண்ணாதீங்க. வீடு கட்டும் யோகம் சிலருக்கு தேடி வருகிறது. பிள்ளைகள் மீது அக்கறை காட்டுங்கள் விட்டுக்கொடுத்து போங்க. மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும். அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு போய் வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நல்லதே நடக்கும்
பண விஷயங்களில் மிக கவனம் தேவை. சனிப் பெயர்ச்சியில் மூன்று இடங்கள் முக்கியமானது. உங்களுடைய ராசிக்கு 3ஆம் இடம், 6 ஆம் இடம், 11 ஆம் இடம் மிகவும் முக்கியமானது.
பரிகாரம்:
குல தெய்வ வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் மிக நன்மைகள் தரும்.
இரும்பு சத்துக்கள் கொண்ட எள் தானம் செய்தால் நன்மைகள் உண்டாகும்.
நாளை தொடரும் ….