ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்.
ஆனால் இங்கே கூத்தாடிகள் இரண்டுபட்டதால் அரசியல்வாதிகள் குத்தாட்டம் போடுகிறார்கள். ஆளும் கட்சியின் ஊடுருவல் காரணமாக ஒற்றுமை விலை போய்விட்டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஒற்றுமை இல்லாத காரணத்தினால் முடிகிற நிலையில் இருக்கிற சங்கக்கட்டிடம் முழுமை பெறாமல் மொட்டையாக நிற்கிறது.
நாசர் (விஷால்) ஒரு அணியாகவும் ஐசரிகணேஷ் மற்றோரு அணியாகவும் செயல்படுகிறார்கள். இதனால்தான் நடிக சங்க கட்டிட நிதிக்காக எடுக்கப்படுவதாக இருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’படம் கிடப்பில் கிடக்கிறது. இதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இன்னொரு பிரிவினரான விஷால் தரப்பு மீது குற்றம் சாட்டுகிறார். விஷால் ஒத்துழைக்கவில்லை என்கிறார் ஐசரி.
‘நடத்தப்பட்ட நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்று நீதி மன்றம் தீர்ப்பு கூறி இருக்கிறது. இதை எதிர்த்து சங்கத்தலைவராக இருந்த நாசர் மனு தாக்கல் பண்ணக்கூடாது என்று ஐசரி நிபந்தனை விதித்திருக்கிறார்.
‘இது சங்கக் கட்டிட வளர்ச்சி பாதிக்கப்படும்.என்பதால் (விஷால் ) எதிர்த்து மனு தாக்கல் செய்யக்கூடாது ‘என சொல்லியிருக்கிறார். ஆக சரியான நடுவர் மத்தியில் பஞ்சாயத்து நடந்தால்தான் கட்டிடம் முழுமை பெறும்.