தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜோதிர்மயி. இவருக்கும், மலையாள இயக்குனர் அமல்நீரத்துக்கும் ஏற்பட்ட காதலால் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கேரள மாநிலம் கொச்சியில், மாகே பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த பஸ்,திடீரென இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இருவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் மீட்டு வேறு காரில் கொச்சிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.