பன்னிரண்டு ராசிகளும், ஒன்பது கிரகங்களும் மற்றும் இருபத்தேழு நட்சத்திரங்களும் ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை பொறுத்து அமைகிறது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து காலபுருஷ லக்கினத்திற்கு 10ஆம் இடமான மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார்.மிதுனம் ராசி பலன் 2020 -ன் படி மிதுன ராசிக்கு சனி பகவான் 8ஆம் இடம் அதாவது அஸ்டமத்து சனியாக வர உள்ளார். இதனால் பலரும் பயந்திருப்பீர்கள். ஆனால் இந்த முறை சனி பகவான் உங்களுக்கு சில யோக பலன்களையும் கொடுக்க உள்ளார்.
மிதுனம் ராசி ஜாதகக்காரர் இந்த வருடம் இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்த வருடம் சில துறைகளில் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், முக்கியமாக உங்கள் ஆரோக்கியம் மற்றும் தொழில். காதல் வாழ்க்கைக்கு இந்த வருடம் சாதகமாக இருக்கும். அதே குடும்ப வாழ்கை, தாம்பத்திய வாழ்கை, திருமணம், குழந்தைகள், கல்வி மற்றும் பொருளாதார நிலைக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த வருடம் உறுதியாக நின்று வருகின்ற சவால்களை எதிர் கொண்டால் இந்த வருடம் மிகவும் நன்றாக இருக்கும். இதுவரை இருந்து வந்த சௌகரிய நிலை இனி அவ்வளவாக இருக்காது. பலவற்றில் தடை ஏற்படும். கடன் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கி இருந்தால் அதனை சரியாக திருப்பி செலுத்த முயலுங்கள். புதிய கடன் வாங்குவதில் கூடுதல் கவனம் தேவை. வேண்டாம் என்றே சொல்லலாம்.
ஆண்டின் தொடக்கத்தில் 24 ஜனவரி அன்று சனி பகவான் உங்கள் எட்டாவது வீட்டில் மகர ராசியில் இருப்பார். இதன் விளைவு முக்கியமாக உங்கள் பணித்துறை, உங்கள் குடும்ப வாழ்கை, உங்கள் பேச்சு, உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தைகள் மீது ஏற்படும். குரு பகவான் ஜனவரி மாதம் முதல் மார்ச் கடைசி வரை உங்கள் ஏழாவது வீட்டில் இருக்கும், இதுமட்டுமின்றி ஜூலை வரை எட்டாவது வீட்டில் இருக்கும். இதற்கு பிறகு நவம்பர் மத்தியில் வரை இருக்கும். உங்கள் தாம்பத்திய வாழ்கையில் ஏற்ற தாழ்வு இருக்க கூடும் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் இதன் விளைவு ஏற்படும். உங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருக்க வாய்ப்புள்ளது. ஆகையால், ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு அடியையும் நீங்கள் கவனித்துக்கொள்வது அவசியமாக இருக்கும், வாழ்க்கையில் பிரச்சினையையும் ஏற்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ஏழாவது வீட்டில் உள்ள ஐந்து கிரகங்களின் கலவையானது திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை சுட்டிக்காட்டுகிறது.பிப்ரவரி, செப்டம்பர், மற்றும் அக்டோபர் மாதம் நீங்கள் உங்கள் வாகனம் வாங்குவதில் வெற்றி அடைவீர்கள். இந்த ஆண்டு சிலருக்கு உங்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது,
மாணவர்களுக்கு இந்த வருடம் சாதாரணமாக இருக்கும். நீங்கள் உங்கள் முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டு இருக்க வேண்டும் மற்றும் கடினமாக உழைத்து கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்கு பலன் கிடைப்பதில் சிறிய கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். அதே நேரத்தில் உங்கள் விடாமுயற்சின் காரணத்தால் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் பின் வாங்காதீர்கள்.மாணவர்கள் உயர் கல்விக்கு வெளி நாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இதனால் அவர்களின் நீண்ட நாள் உயர் கல்வி கனவு வெற்றி பெரும். மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வில் நன்றாக தேர்ச்சி பெறுவார்கள் மற்றும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைவார்கள்.
ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், நீங்கள் உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் இந்த காலகட்டத்தில், உங்கள் எட்டாவது வீட்டில் சனி இருப்பதும், சனியின் பரிமாற்றமும் சில பெரிய நோய்களைப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. எனவே, எந்தவொரு சிறிய உடல்நலப் பிரச்சினையையும் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள், இதுபோன்ற எந்தவொரு பிரச்சினையையும் புறக்கணிக்காதீர்கள்.
உங்கள் ராசிப்படி, ஒரு விசயத்தை நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் பல முறை நீங்கள் எடுக்கும் முடிவுகள் தோல்வி அடையக்கூடும், அதனால்,நன்கு சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் வயதில் பெரியவர்களின் ஆலோசனை பெற்று வேலை செய்ய தொடங்க வேண்டும்,தவறினால்,அது உங்களுக்கு இழப்பையம் ஏற்படுத்த கூடும். இந்த ஆண்டு நீங்கள் மிக கவனமாக பயணித்தால், இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்ததாக விளங்கும்.
பரிகாரம்: மிதுன ராசிக்காரர்கள் பரிகாரமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வந்தால் அஷ்டம சனியின் பாதிப்புகளிலிருந்து முழுமையாக தங்களை விடுவித்துக் கொள்ளலாம்.
நாளை தொடரும்…