கல்யாணசமையலில்புளியஞ்சாதத்துக்குசிறப்பான இடம்உண்டு
மாயா பஜார் என்றபடத்தில் உள்ள பாடலேசாட்சி
புளியோதரையும் சோறு வெகுபொருத்தமா சாம்பாறுஎதுகை மோனை க்காக
எழுதப்பட்ட வரிகள்தானே தவிர நல்ல
ருசி அறிந்த நாக்குகள் இதை பொருத்தம் என்றே ஏற்காது
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வடாம் வாழைக்காய் வறுவல் போன்றவைதான் மிக பொருத்தம்.
முன்னுரை ஓகே
புளியோதரை யின்பெருமைகள் மற்றும் மகத்துவம் கெட்டுகெதரில் புளியோதரை உண்டு என்றால் தவிர்க்க முடியாத வேலை இருப்பவர்கள்கூட அந்த வேலைகளை தள்ளிவிட்டு ஆஜராகி விடுவார்கள் அந்த அளவுக்கு ஈர்ப்பு சக்தி புளியஞ்சாதத்துக்குஉண்டு
அறுசுவையையும்தன்னுள்ளே கொண்டது எல்லாத்துக்கும் மேலாக பெருமாளின் விருப்பமான நைவேத்யம்
இத்தனை சிறப்புகள் உள்ள புளியோதரைக்கு
அண்ணாச்சி கடையில் உள்ள அத்தனை சாமான் களும்(ஒருசில தவிர) தேவை. அனேகமாக கொலஸ்ட்ரால் சமாச்சாரம் தான்!
தயிர்சாத கொலஸ்ட்ராலை கிருஷ்ணன் காப்பாற்றியதுபோலபுளியோதரை கொலஸ்ட்ராலை பெருமாள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. புளி தான் கதாநாயகன்புளி பெரிய எலுமிச்சை அளவு முதலில் பெரிய தாம்பாளத்தில் புளி அதுக்கு சரியான அளவு கல்உப்பு (சுமாராக குழிக்கரண்டியில்அரைகரண்டி)
மிளகாய் வற்றல் 15முதல்20
(தற்காலத்தில் மிளகாயில் காரம் இல்லை)
செய் முறை
கல்சட்டியில் அல்லது கனமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு புளி போட்டு கொதிக்க விடவும் இனிமேதான் வேலை யேஆரம்பம் ஒரு புடி எள்ளை ஊற வைத்து களைந்து கல்அரித்துவைக்கவும் வாணலியில் எண்ணெய் விடாமல் எள்ளை படபடவென்று வெடிக்க விடவும்
கால்கரண்டிவெந்தயத்தையும் வறுத்து எள்ளு டன் சேர்த்து வழு பொடி செய்யவும்
இப்பத்தான் எண்ணையார் எண்ட்ரி’கால் குழிக்கரண்டி நல்லெண்ணை (செக்கு எண்ணைஉத்தமம்) விட்டு அரைகுழி கரண்டி கடலை பருப்பு நாலு ஸ்பூன் தனியா கொண்டைகடலைஅளவுகட்டிபெருங்காயம் இவற்றை பொன்னிறத்தில்வறுத்து பொடி செய்யவும்
புளியை கொதிக்க வைத்தது நினைவிருக்க அது நன்றாக ஆறிஇருக்கும் அதைகசக்கி
பிழிந்து வடிகட்டவும் மேலும் அறை டம்ளர் தண்ணீர் விட்டு கசக்கி பிழியலாம்
மூன்றாவது முறை முயன்று பார்க்கவேண்டாம்
காரணம் கொதிக்க நேரமாகும் .மூன்றாவது புளித்தண்ணீரில் ருசிஇருக்காது
இப்பத்தான் நம்ம முக்கியமான ஸ்டேஜில் இருக்கோம் புளித்தண்ணீர் கொதித்துநன்றாக வத்தியிருக்கும் மி.வற்றல் கபருப்பு தனியா பொடியை போட்டு கலக்கவும் .செக்கு எண்ணெய் ஒருகுழிகரண்டி நன்னா பத்த பத்த காச்சிஅதிலேயேகருவேப்பிலையை
போட்டு ஈரமில்லாமல் மொறு மொறுப்பாக வறுத்து சுர்ர்ர்ர் என்று வற்றிய புளிக்கூழில் விடவும் .எள்ளு பொடி வெந்தய பொடி பெருங்காய பொடி போன்ற வாசனா
திரவியங்களை சேர்க்கவும்
மஞ்சள் பொடி தேவையானால் எண்ணெயில் பொரித்து கலக்கலாம்
பொலபொல என்று வடித்த சாத்தில் அரைகரண்டி நல்லெண்ணைவிட்டு புளியோதரை போட்ட அழுத்தம் கொடுக்காமல்
நாஸூக்காககலக்கவும்
கலக்கலான புளியஞ்சாதம் ரெடி!
—இந்திரா காசிநாதன்.