சில நாட்களுக்கு முன்னர் ‘நயன்தாரா என்கிற பெயரை நான் தான் வைத்தேன் ‘ என்று டிட்டோ ஜான் என்கிற டைரக்டர் உரிமை கொண்டாடியிருந்தார்.
“பெயர் வைத்த நான் வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறேன் .நயன்தாராவோ உச்சத்தில் இருக்கிறார். பெயர் வைக்கும்படி டைரக்டர் சத்யன் அந்திக்காட் தான் என்னிடம் சொன்னார். அப்போது நான் அவரிடம் அசிஸ்டெண்டாக இருந்தேன் “என்பதாக சொல்லியிருந்தார்.
அதற்கு சத்யன் அந்திக்காட் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
“அந்த டிட்டோ ஜான் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது.’மனசின்னக்கரே’ என்கிற படத்தில் டயானா நடித்தபோது அந்த பெண்ணுக்கு என்ன பெயர் வைப்பது என்று நான் யோசித்தேன்.பல பெயர்களை எழுதி அந்த பெண்ணிடமீ கொடுத்து விட்டேன். அந்த பெயர்களில் ஒன்றை அவரே தேர்ந்து எடுத்துக் கொண்டார்.அதுதான் நயன்தாரா “என்கிறார்.