விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனியானவர் உங்களது ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதி அவர் 7ம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது சற்று சுமார் ஆனாலும் கடகம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது.இனி சஞ்சரிக்கவிருக்கும் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும்.
கடந்த இரண்டு வருடங்களாக சந்தோஷத்தை மட்டும் அனுபவித்து வந்த நீங்கள் இந்த வருடம் நன்மைகளையும், தீமைகளையும் சரிசமமாக அனுபவிக்க போகிறீர்கள். உங்கள் ராசிக்கு 7ல் சனி வரப் போகின்றார். இதனால் சில சங்கடங்கள் வரும். சனி தன் சொந்த வீட்டில் இருப்பதால் வக்கிர நிலை குறைவாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு 4ஆம் இடம், 9ஆம் இடம், மற்றும் உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.திருமணத்தடை விலகும். கணவன் மனைவி இடையே அநாவசியப் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. நிச்சயம் ஆனவர்களாக இருந்தால், திருமணத்திற்கு பிறகு உங்களின் அன்பை வெளிப்படுத்துவது நல்லது. கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
இதனால்,வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும்.
செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும்.
காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும்.
தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும்.யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். மனம் அமைதியற்ற நிலை ஏற்படும் காலத்தில் யோகா, தியானம் செய்ய மனது அமைதிப்படும்.
பரிகாரம்:குலதெய்வ வழிபாடு அவசியமாகும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் முருகனை வழிபடுவதன் மூலம் தொழிலில் வரும் சங்கடங்களை தவிர்க்கலாம். பசுவிற்கு தானம் செய்வது நன்மையை தரும்.