சிம்ம ராசிக்காரர்கள் நல்ல குணம் கொண்டவர்களாக, கம்பீரமானவர்களாக இருப்பர். ஒற்றுமை உணர்வும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, சக்தியை வெளிப்படுத்துதல் போன்ற குணங்களை கொண்டவர். ஒரு கூட்டத்தில் இருந்தாலும் தனியாக தெரியக் கூடியவர்கள்.
ஒரு விஷயத்தை ஒரு அணியாக செய்தால், அதனை மிக சரியாக செய்து முடிக்கக் கூடியவர்கள். இவர்களிடம் இருக்கும் ஒரு சிறிய பிரச்னை என்னவென்றால், மற்றவர்களை அடக்க நினைப்பார்கள். அதனை சற்று எளிதாக்கிக் கொண்டால் வாழ்வில் பல சாதனைகளைப் படைப்பார்கள்.
இந்த சனிப்பெயர்ச்சி மூலம் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும், குழந்தை பேறுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.படிப்பு சரியாக அமையவில்லை, போட்டித் தேர்வுவில் வெற்றிபெற முடியவில்லை என மன விரக்தியில் இருப்பவர்களுக்கு, நல்ல பலன்கள் கிடைக்கும்.
செய்யும் முயற்சிகளுக்குஏற்ப, இரண்டு மடங்கு வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் நன்றாக நிறைவேறும். லாபம் நன்றாக இருக்கும். வீண் வாக்குவாதங்கள் இருக்காது. பயணங்கள் மட்டும் சற்று தடை ஏற்படலாம்.அரசு தொடர்பான சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்:கஷ்டப்படுபவர்களுக்கு உணவு கொடுங்க. ஏழைகளுக்கு தானம் பண்ணுங்க. ஒருமுறை திருநள்ளாறு போய்விட்டு வாருங்கள். நல்லது நடக்கும்.