டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வையே கேள்விக்குறியாக்கிய சில அரசு அதிகாரிகளின் செயலால் அந்த தேர்வின் நம்பகத்தன்மையை சந்தேகப்படும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து, நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:
NPSC இப்போது TNPPSC (Thamizh Nadu Pre-Paid Service Commission) ஆகி இருக்கிறது. முன் புரோக்கர்களிடம் கொடுத்து, பின் அரசிடம் சம்பளமாக பெறும் முறை தான் Group 1 முதல் Group 4 வரை நடக்கும் என்றால் 5ஆம் வகுப்புக்கும், 8ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு எதற்கு? தகுதித்தேர்வுகள் எதற்கு? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த டுவிட் சமூக வலைத்தளங்களால் பெரும் வைரலாகி வருகிறது.
TNPSC இப்போது TNPPSC (Thamizh Nadu Pre-Paid Service Commission) ஆகி இருக்கிறது.
முன் புரோக்கர்களிடம் கொடுத்து, பின் அரசிடம் சம்பளமாக பெறும் முறை தான் Group 1 முதல் Group 4 வரை நடக்கும் என்றால் 5ஆம் வகுப்புக்கும், 8ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு எதற்கு? தகுதித்தேர்வுகள் எதற்கு?— Kamal Haasan (@ikamalhaasan) February 1, 2020