சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஐ கோர்ட் தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக பூச்சி முருகன் தெரிவித்தார்.
ஆனால்,விஷால் தரப்பினர் மேல்முறையீடு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கே.பாக்யராஜின் அணியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில், நடிகர் கருணாஸ் கூறியதாவது:
எங்களின் சட்டரீதியான போராட்டம் தொடரும்.நடிகர் சங்க சொத்து என்பது தனி நபர் சொத்து அல்ல.நடிகர் சங்கத்தை தனிப்பட்ட நபர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. எனக்கு பதவி ஆசை கிடையாது. பதவிக்காக எத்தனை லட்சங்களை வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு நான் முட்டாள் அல்ல.
தற்போது நடிகர் சங்கமே முடங்கிப்போய் உள்ளது. கோர்ட் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் தேர்தலை நடத்துவதற்கு சங்கத்தில் பணமும் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.கருணாஸின் பேட்டி நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.