பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு காலத்தில் காதலர்களாக உலா வந்த சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் இது நம்ம ஆளு. நீண்ட நாட்களாக படப் பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு சிம்புவின் இளவல் குறளரசன் இசை யமைத்து வருகிறார். இன்னும் ஓரிரு பாடல்களை மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில் மேலும் புதிய பாடல் ஒன்றை தனது’தோஸ்த்’ தனுஷை பாட வைக்கலாம் என்று சிம்பு ஆசைப்பட . இதைய டுத்து பாண்டிராஜும் தனுஷை அனுகி, என் படத்தில் ஒரு பாட்டு பாடுங்களேன் என்று கேட்க,. ஆனால் தனுஷோ சிம்பு நண்பன் தான் ஆனாலும் சாரி, பாட முடியாது என்று மறுத்துவிட்டாராம். இல்ல,திரும்ப கேட்டு பாருங்க தனுஷ் பாடுவாரு என சிம்பு பாண்டி ராஜை நச்சரிக்க. அட ,போங்கப்பா ,இந்த விளையாட்டுக்கு நான் வரல, படத்தை எப்ப வேணா முடிச்சுகோங்க ,நமக்கு து சரிப்பட்டு வராது என்ற பாண்டிராஜோ தனது பசங்க டீமோடு ஜோதிகாவை வைத்து புதிய படத்தை எடுக்கத் தொடங்கி விட்டாராம்.