“தேவையில்லாத பிரச்னை. இப்ப எதுக்கு ஒரு பொண்ணு மீது பழி போடுறாங்க! புரியல தலைவா” என்று அவரது பாணியில் சொல்லி வருத்தப்படுகிறார் தயாரிப்பாளர் ஏஎல்.அழகப்பன்.
அவருடன் பேசினால் இடையில் எக்கச்சக்கமான ‘தலைவா’ வந்து விழும்.அது அவரது இயல்பு.
நடிகர் உதயா, இயக்குநர் ஏஎல்.விஜய்யின் தந்தை.
“அமலாபாலின் விவாகரத்துக்கு நடிகர் தனுஷ்தான் காரணம் “என்று இவர் சொன்னதாக ஒரு செய்தி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறது. மனிதர் ரொம்பவே அப்செட்.
“நான் தனுஷ்தான் காரணம்னு சொல்லவேயில்லை. தேவையில்லாம இப்ப எதுக்கு பிரச்னை பண்றாங்க .புரியல தலைவா! விஜய் டைரக்ட் பண்ற தலைவி பட வேலையா நாடு நகரம்னு போயிட்டிருக்கார்.நானும் என் பட வேலையா இருக்கிறேன்.
கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணுக்கிட்ட நாங்க சொன்னது இந்து மதத்துக்கு மாறனும். வீட்டுக்கு வர்ற மருமகதான் விளக்கேத்தனும் .படங்கள்ல நடிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கோம். அந்த பொண்ணும் சரின்னது .அதுக்குள்ளே அவங்க பத்திரிக்கை அடிச்சிட்டாங்க. நாங்களும் அவசரப்படல .ஆனா நாங்க சொன்னது எதுவும் நடக்கல. நடிக்கிறதுக்கு ஒப்பந்தம் ஆச்சு .அதுனால மியூச்சுவல் டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க. நான் யாரையும் காரணமா சொல்லல.”என்கிறார் அழகப்பன்.