அண்மைக்காலமாக இயக்குநர் பேரரசு அரசியல் பேசி வருகிறார்.
இந்து,இந்து மதம் என்பதில் மிகவும் பிடிப்புள்ளவராக இருக்கிறார். இவரது டிவிட்டர் கணக்கில் அதிகமாக வரவாகி இருப்பது அரசியல் தான்.
“தஞ்சை குடமுழுக்கில் தமிழே இருக்க வேண்டும் “
“5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது.அறிவாளிகளை உருவாக்கி புத்திசாலிகளை இழந்து விடக்கூடாது “
இப்படி சில பல கருத்துகளை சொல்லி வருகிறார். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கணிசமான அளவுக்கு சினிமா பிரபலங்களை இழுத்து விட வேண்டும் என்கிற அஜெண்டாவுடன் களம் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. விரைவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாஜகவுடன் இணையலாம் என்கிற தகவல் வந்து கொண்டிருக்கிற நேரத்தில்தான் பேரரசு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.
“அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்!” என்று வலுவாக முட்டுக்கு கொடுத்திருக்கிறார் பேரரசு.
“இந்துவாய் இருந்துகொண்டு இந்து மதத்தை இழிவாய் பேசி பிற மதத்தை ஆதரிப்பது சரியாம், ஒரு இந்து ,இந்து மதத்தை ஆதரித்து பேசினால் அவர் பதவியை பறிக்கனுமாம்! நல்ல மதசார்பின்மை!!!” என்று கூறி திமுகவை மறைமுகமாக சாடியிருக்கிறார்.
இவர் பாஜகவில் இணைந்துவிட்டார் என்பது முந்தைய செய்தி.